Financial assistance to set up milk products sales center of the company for differently abled persons: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசால் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இது நாள் வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க நிதி உதவி பெறாதவராக இருக்க வேண்டும்.

எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்று சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 15.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கவும், மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி 04328 – 225474 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என்றும் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!