Fire Accident near Perambalur: Kunnam MLA R.T. Ramachandran offered relief assistance.

பெரம்பலூர் மாவட்டம், அத்தியூர் இந்திரா நகரில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குன்னம் எம்எல்ஏ ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கிய போது எடுத்த படம்.
பெரம்பலூர் மாவட்டம், அத்தியூர் கிராமத்தில் மின்கசிவால் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்ந்திரன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
பெரம்பலூர் வட்டம், குன்னம் வட்டம், அத்தியூர் கிராமம், இந்திரா நகரில் வசிப்பவர்கள் முனியன் மகன் தங்கராஜ் (வயது 58) பன்னீர்செல்வம் (54) மகன்கள் ஜெய்சங்கர் (34) இவர்கள் மூவரும் உறவினர்கள். கூரையால் வேயப்பட்ட இவர்களது வீடுகள் அருகருகே உள்ளது. அடுத்த தெருவில் உள்ள மற்றும் சாரதா (33) ஆகிய இவர்களின் வீடுகள் நேற்று காலை சுமார் 10 மணியளவில் வேகமாக வீசிய காற்றால் மின்கசிவு ஏற்பட்டு இவர்களது வீடுகள் தீப்பற்றிக் கொண்டது.
இதில் வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்கள், சைக்கிள், கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின. தகவல் அறிந்த வந்து திட்டக்குடி, வேப்பூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இவற்றின் சேத மதிப்பு 75 ஆயிரம் ருபாய் ஆகும்.
இதுகுறித்து தகவல் அறிந்த, பெரம்பலூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர். டி. ராமச்சந்திரன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அதிமுக சார்பில் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், மேலும் அரசின் சர்ர்பில் 10கி அரிசி, வேட்டி, சேலை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினர்.
அவருடன் வேப்பூர் ஒன்றிய அதிமுகவினர் , வருவாய், ஊரக வளர்ச்சி துறையினர் பலர் உடன் இருந்தனர்.