Fire accident near Perambalur; Rooftop house completely gutted!
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அருகே உள்ள தழுதாழை கிராமத்தை பெரியண்ணன் மகன் வேல்முருகன் என்பவரது கூரை வீடு தீடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் ஊர்க்காரர்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்தும் தீக்கிரையானது.
பெரம்பலூரில் இருந்து தீயணைப்பு படையினர் எரிந்த சேதமான வீட்டின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, மேலும், தீ பரவாமல் தடுத்ததுடன் விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த அரும்பாவூர் போலீசார் தீவிபத்து ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வருவாய்துறையினர் தீருதவிகளை வழங்கினர். இச்சம்பவம் இன்று மதியம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எரிந்து போன வீட்டின் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.