Perambalur: Devotees’ van overturns, one killed, 13 injured!

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குனம் பிரிவு பாதை அருகே கோவிலுக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் கப்பூர் கிராமத்திலிருந்து ஒரு சுற்றுலா வேனில் 18 பேர் அரியலூர் அருகே உள்ள கலியபெருமாள் கோவிலுக்கு புரட்டாசி 2வது சனிக்கிழமை சாமி தரிசனம் செய்வதற்காக வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை விழுப்புரத்தை சேர்ந்த அப்துல் சமது மகன் ரியாஸ் அஹமது ஓட்டினார்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு பாதை அருகே வந்தபோது வேனின் பின்புற டயர் வெடித்து விபத்திற்குள்ளானது. இதில், வேன் சாலையில் கவிழந்தது. வேனில், பயணித்த வெண்மணி ஆத்துரை சேர்ந்த ஜீவா (வயது 45) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் டிரைவர் உட்பட 13 பேர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தினால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!