Perambalur: Person who consumed poison due to family problems dies!

பெரம்பலூர் மாவட்டம், தேனூர் அருகே உள்ள கண்ணப்பாடியை சேர்ந்தவர் மணிவாசகம் (62). இவருக்கு ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த 24ம் தேதி களைக்கொல்லிக்கு அடிக்கும் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் உடற்கூறு ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497