Perambalur: New AIADMK District Secretary Venkatachalam (VGM) met General Secretary Edappadi K. Palaniswami and received his best wishes.

பெரம்பலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.விற்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. புதிய செயலாளராக குன்னம் தாலுகா வேப்பூர் வயலப்பாடியை சேர்ந்த வெங்கடாசலம் (வி.ஜி.எம்.) நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெங்கடாசலம் இதுவரை மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது அவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வரகூர் அருணாசலம் தலைமை நிலைய செயலாளராகவும், முன்னாள் எம்.பி. மருதராஜா கட்சியின் அமைப்பு செயலாளராகவும், முன்னாள் எம்.பி. சந்திரகாசி கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அ.அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் என்.கே.கர்ணன், செந்துறை உதயம் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இன்று பெரம்பலூரில் கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497