Perambalur: Loans with interest subsidies for agricultural infrastructure projects; Collector’s announcement!

தமிழகத்தில், வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு பெறப்படும் வங்கிக் கடனுக்கான வட்டிக்கு மானியம் வழங்கும் திட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை விற்பனைத் துறைக்கு நடப்பு நிதி ஆண்டில் 14 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக பட்சமாக 2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர்பு சேவை, சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்பு, தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்தும் அலகுகள், குளிர்பதன கிடங்குகள், குளிர்சாதன வாகனம், பண்ணைக் கழிவு மேலாண்மைக்கான உட்கட்டமைப்புகள் மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு அலகு, விதை சுத்திகரிப்பு அலகு, காளான் வளர;ப்பு, தேன் சுத்திகரிப்பு அலகு, பட்டுப்புழு வளர்ப்பு உள்பட பல்வேறு திட்டங்களுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும், அங்கக இடுப்பொருள்கள் உற்பத்தி ட்ரோன் வாங்குதல் நர்சரி அமைத்தல், அறுவடை இயந்திரம் வாங்குதல், கரும்பு அறுவடை இயந்திரம் வாங்குதல், பசுமைக்குடில் அமைத்தல், டிராக்டர் இயந்திர வாடகை மையம் அமைத்திடவும் இத்திட்டத்தின் மூலம் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம்.

https://agriinfra.dac.gov.in என்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு 9842011079, 9965737555 என்ற எண்களிலும் ddab.perambalur2024@gmail.com என்ற இ.மெயில் அல்லது வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), பெரம்பலூர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!