Fire and Accident and Rescue Rehearsal at MRF Tyre Company!

பெரம்பலூர் அருகே விஜயகோபாலபுரத்தில், தமிழ்நாடு தீ மற்றும் மீட்பு படை துறையினரின் சார்பில், தீத்தொண்டு வார விழா கோட்ட அலுவலர் அம்பிகா தலைமையில் நடைபெற்றது. இதில், டயர் தொழிற்சாலை பணியளார்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்தும், விபத்து மற்றும் அவசர காலங்களில் எவ்வாறு செயல்படுவது, விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, தீயை அணைப்பது, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு குறித்து செயல்விளக்கங்களை செய்து காட்டினர். முதலுதவி குறித்தும் எடுத்து உரைக்கப்பட்டது.

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் எப்படி பாதுகாப்பாக பணிபுரிவது, ஆபத்தில் சிக்கியர்களை மீட்பது, முதலுதவி குறித்தும் செயல் விளக்கம் கொடுத்தனர். இதில் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், நிலைய அலுவலர், ந, உதயகுமார், தொழிற்சாலை பணியாளர்கள், அலுவலர்கள், செக்யூரிட்டிகள், பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!