Fireworks demonstration of safe,
பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில், உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் அமைதிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், செங்குணம் கிராமத்தை பெரம்பலூர் மனவளக் கலை மன்றம் தேர்வு செய்துள்ளது.
பெரம்பலூர் புவனேஸ்வரி தேவராஜன் மருத்துவமனை, டாக்டர்.புவணேஸ்வரி தலைமையில் பெண்கள் உள்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் தீ அணைப்பு துறையினரின் செயல் விளக்கம் மூலம் தீபாவளி விழாவில் பட்டாசுக்களை வெடிப்பது குறித்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் விழிப்புணர்வு பெறும் வகையிலும், பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடும் வழிமுறைகளை செயல் விளக்கம் நேற்று முன்தினம் செய்து காண்பித்தனர்.
பெண்கள் பட்டாசு வெடிக்கும் போது துப்பட்டாவை, கட்டிக் கொண்டுதான் பட்டாசு கொளுத்த வேண்டும். காற்றில் பறக்க விட்டுக் கொண்டு செய்யக் கூடாது.
சங்கு சக்கரம் பட்டாசு வெடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டும், அதை கையால் சுற்ற முயற்சிக்க கூடாது. புஸ்வானத்தை தள்ளி இருந்தே பற்ற வைக்க வேண்டும். உள்ளங்கையில் பற்ற வைப்பதோ, அல்லது பக்கவாட்டில் பற்ற வைப்பதோ கூடாது.
மத்தாப்பை தள்ளி நின்று கைகளை நீட்டி கொளுத்தி மகிழ வேண்டும், ஆடைகளின் அருகில் எடுத்து வரக்கூடாது.
ஆட்டோ பாம், ராக்கட் போன்ற வெடிகளை கூரை வீடுகள் அருகே பற்ற வைக்க முயற்சிக்க கூடாது. தவறி கூரை மேல் விழுந்தால், தீவிபத்தை உண்டாக்கி பொருள் சேதத்தை ஏற்படுத்தும்.
கண்ணாடி, செருப்பு, பருத்தி ஆடைகளை அணிந்து கொள்வதே சிறந்த வழியாகும். பட்டாசுகளை கொளுத்திய பின்னர் சிதறிக்கிடக்கும் பட்டாசு மருந்துகளை ஒன்று சேர்த்து பற்ற வைக்கக் கூடாது. அது விபரீத்தை உண்டாக்கும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் அருகில் பட்டாசுகளை வைக்கவோ, பற்ற வைக்கவோ கூடாது.
தீப்புண் ஏற்பட்டால் சாதாரண தண்ணீரை மட்டுமே கொண்டு கழுவி மருத்துவ மனையில் உரிய சிகிச்சை பெற வேண்டும்.
வீட்டில் பலகாரம் செய்து போது எண்ணெய் சட்டியில் தீ பற்றிக் கொண்டால் ஈரமான சாக்கை கொண்டு மூட வேண்டும். தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சிக்க கூடாது, என்பது உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் செய்து காண்பித்து பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் தீ தடுப்பு, மற்றும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்து செயல்விளக்கம் செய்தனர்.
இதில், தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் சதாசிவம் தலைமையில் கலந்து கொண்டனர்.