Fishery Assistant for Work Placement recommend calling to check details in perambalur employment office
பெரம்பலூர் மாவட்டத்தில உள்ள மீன் வளத் துறையில் ஒரு “மீன்வள உதவியாளர்” பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருத்தல் வேண்டும். மேலும் நீச்சல், வலைவீசி மீன்பிடித்தல் மற்றும் மீன்பிடி வலையில் ஏற்படும் பழுதினை சாpபார்த்தல், போன்ற பணிகளை மேற்கொள்ள தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
மேலும், இப்பணியிடத்திற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். உச்ச வயது வரம்பு 01.05.2016 அன்று பொதுப்பிரிவிற்கு 30 வயது மிகாமலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர் 32 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதிகளை பெற்று 18.11.2016-க்கு முன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் 30.11.2016-க்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு கல்விச்சான்று மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து பணியிடத்திற்கான பரிந்துரை விபரங்களை சரிப்பார்த்துக் கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.