Five ceremony on behalf of the Namakkal Poet Ramalingam Peravai
நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது.
நாமக்கல் கவிஞர் சிந்தனைப்பேரவை சார்பில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரின் பிறந்த நாள் விழா, நாமக்கல் கவிஞர் நற்றமிழ் விருது வழங்கும் விழா, சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் புத்தகம் வெளியீட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.
நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை தலைவர் டாக்டர் மோகன் வரவேற்றார். நாமக்கல் தமிழ்ச்சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேலு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, டாக்டர் கவிதாசன் எழுதிய முயன்று எழு, முன்னேறு என் தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டுப் பேசினார்.
நாமக்கல் கவிஞரின் மகன் ராஜா வெங்கட்ராமன், பேரன் பாண்டியன் ஆகியோர் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர். தன்னம்பிக்கைப் பேச்சாளர் டாக்டர் கவிதாசன், சேலம் சிஎஸ்ஐ கல்லூரி பேராசிரியர் சின்னுபாண்டியராசு ஆகியோருக்கு நாமக்கல் கவிஞர் நற்றமிழ் விருது வழங்கப்பட்டது.
மேலும் பல்வேறு சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. கம்பன் கழகத்தலைவர் சத்தியமூர்த்தி, கவிஞர் சிந்தனைப் பேரவைத் துணைத்தலைவர் கோபால நாராயணமூர்த்தி, துணை செயலாளர் டாக்டர் எழில்செல்வன், அமைப்புச் செயலாளர் யுவராஜா உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டு பேசினார்கள்.