பெரம்பலூரில் 4-வது நாளாக நகை கடைகள் மூடப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தங்க நகை உள்பட பிற வகை ஆபரணங்களுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2-ம் தேதி முதல் நகை கடைகளை அடைத்து அதன் உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற 7-ம் தேதி வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 35 ஆயிரம் நகை கடைகள் மூடப்பட்டுள்ளன.
பெரம்பலூரில் தங்கம், வெள்ளி, முத்து, வைரம் நகை வியபாரிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து 4வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.
இதன் காரணமாக பெரம்பலூரில் 100க்கும் மேற்ப்பட்ட நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கடைவீதி, பூசாரி தெரு, தேரடி தெரு, , சிவன் கோவில் பகுதி உட்பட நகரில் உள்ள அனைத்து நகை கடைகளும் நகை பட்டறைகளும், நகை அடகு கடைகளும் மூடப்பட்டுள்ளன.
நகை கடைகள் தொடர்ந்து 4 நாட்கள் மூடப்படுவதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கியுள்ளது. திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு நகை வாங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.