For the fourth installment, the Amma restaurants in Perambalur are offering free food for Rs. 4 lakhs donated by RT Ramachandran MLA

பெரம்பலூரில் உள்ள இரண்டு அம்மா உணவகத்திற்கு வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்க நான்வது தவணையாக 4 லட்ச ரூபாய்க்கான காசோலையை நகராட்சி ஆணையரிடம் குன்னம் எம்.எல்.ஏ.,வழங்கினார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகங்களில் ஊரடங்கு காலம் முடியும் வரை ஏழை, எளிய மக்கள் இலவசமாக உணவு பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் ஏற்கனவே மூன்று தவணைகளாக தலா ரூ. லட்சம் வீதம் மொத்தம் ரூ. 6 லட்ச ரூபாய் அம்மா உணவகத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கு காலம் ஐந்தாவது முறையாக ஜுன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் தனது சொந்த பணத்திலிருந்து. மேலும் 4லட்ச ரூபாய்க்கான காசோலையை நான்காவது முறையாக பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னனிடம் இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, உள்ளிட்ட கட்சியினர், நகராட்சி பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

படவிளக்கம்: பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு, கட்டணமில்லாமல் உணவு வழங்க நான்காம் தவணையாக ரூ.4 லட்சத்திற்கான காகோலையை அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமசந்திரன், நகராட்சி ஆணையர் குமரிமன்னனிடம் வழங்கிய போது எடுத்தப்படம். அருகில், பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!