For young voters, Electronic Color Voter ID Card: Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டர் (பொ) ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறையினை பெரம்பலூர் வருவாய் கோட்ட சார் ஆட்சியர் பத்மஜா, முன்னிலையில் பெரம்பலூர் கலெக்டர் (பொ) ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் தெரிவித்ததாவது:

இந்திய தேர்தல் ஆணையம் 11வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 25.1.2021 அன்று மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் புதிய வாக்காளர்கள் இந்த மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து பயனடைந்து வருகின்றனர்.

வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் 2021ல் இணைந்த புதிய வாக்காளர்கள் Voter Helpline என்ற செயலி மூலமாகவோ அல்லது www.nvsp.in என்ற இணையதளத்தில் தங்களது அலைபேசி எண்ணை பதிவு செய்து தங்களது மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து சுயமாக அச்சடித்து லேமினேட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தங்களது கைபேசியிலோ அல்லது டிஜிலாக்கரில் பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் 25.1.2021 முதல் 28.2.2021 வரை வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் 2021ல் இணைகின்ற புதிய வாக்காளர்கள் மட்டுமே இந்த மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை தற்போது பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால் வாக்காளர் பட்டியலில் புதிதாக இணைந்த இளம் வாக்காளர்கள் மேலே விவரிக்கப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்தி தங்களது அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!