Four villagers on hunger strike to protest the transfer of VAO office
பெரம்பலூர் அருகே உள்ள ரசுலாபுரம் கிராமத்தில் இருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு கிராம நிர்வாக அலுவலகம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசுலாபுரம், ராமலிங்கபுரம் அருணகிரிமங்கலம், மாக்காயிகுளம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், ரசுலாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலகம் கடந்த 13 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் ரசுலாபுரம், ராமலிங்கபுரம் மாக்காயிகுளம், அருணகிரிமங்கலம் மற்றும் நொச்சிக்குளம் ஆகிய கிராம மக்களும் பயன் அடைந்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து வசதி இல்லாத நொச்சிக்குளம் கிராமத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசுலாபுரம், ராமலிங்கபுரம் மாக்காயிகுளம், அருணகிரிமங்கலம் இன்று போராட்டம் நடத்தினர்.

நொச்சிக்குளம் கிராமத்திற்கு சென்று வர போதிய போக்குவரத்து வசதி இல்லை என்றும் மழை காலங்களில் மருதையாற்றை கடந்து சென்று வருவது என்பது மிக சிரமமான காரியம் என்று தெரித்த அவர்கள், வருவாய்த் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ரசுலாபுரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை அறிந்த வருவாய் துறையினர் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வந்தவர்கள் பாதி வழியிலேயே திரும்பி சென்றதாகவும் தெரிவித்தனர். மேலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் சாலைமறியல், ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்து உள்ளனர். மேலும், இது குறித்து அரியலூர் போலீசார் போதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!