Free sewing training for women in Perambalur

பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் T.S.ராஜகோபாலன் வெளியிட்ட அறிக்கை:

ஐ.ஓ.பி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் ஆக.7-ம் தேதி முதல் தையல் கலைப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கு உண்டான தகுதி, வயது 18க்கு மேல் மற்றும் 45க்கு குறைவாக இருத்தல் வேண்டும்.

குறைந்த பட்சம் 8ஆம் வகுப்பு படித்தவராக இருத்தல் வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களாக இருத்தல் வேண்டும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

இந்தப் பயிற்சி தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சியில் அனைத்து விதமான தையல் கலை பயிற்சி சிறந்த முறையில் அளிக்கப்படும். பயிற்சிநேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் இப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப் பட்டதாகும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஆகஸ்ட் 4ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம்,ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328 277896 என்ற தொலைப்பேசி மூலமாக தொடர்புக் கொள்ளவும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!