Free Training Course for Forest Personnel Examination: Namakkal Collector Information
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பு :
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலமாக, வனத்துறைத்துறையில் காலியாக உள்ள 726 வனக்காவலர் மற்றும் 152 டிரைவர் லைசென்சுடன் கூடிய வனக்காவலர் என மொத்தம் 878 காலிப்பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் தேர்வு நடத்துவதாக அறிவித்து உள்ளது.
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க வனக்காவலர் பதவிக்கு +2 வகுப்பில் அறிவியல் பிரிவில் தேர்ச்சியும், டிரைவர் லைசென்சுடன் கூடிய வனக்காவலர் பதவிக்கு +2 வகுப்பில் அறிவியல் பிரிவில் தேர்ச்சியும், டிரைவிங் லைசென்சும் பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்விற்கு விண்ணப்பம் செய்தவர்கள் பயனடையும் வகையில் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் வருகின்ற 12ம் தேதி முதல் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும்.
மாதிரித் தேர்வுகளும் அவ்வப்போது நடத்தப்பட உள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்கள், இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தேர்வுக்கு விண்ணப்பம் செய்த விண்ணப்ப நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் வருகின்ற 12ம் தேதி நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.