Free Training for Competitive Exams conducted by Tamilnadu Uniform Worker Selection Committee
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலைநாடும் இளைஞர்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று பலரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கை எண்;-217 மூலம் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் போன்ற 6,140 பணிக்காலியிடங்களுக்கானத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு http://www.tnusrbonline.org என்ற இணையதளத்தின் வாயிலாக 27.01.2018-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகலுடன் 05.02.2018-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.