Free training with employment for urban youth

Training and Development – Business


பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் திட்ட செயலாக்க அலகின் கீழ் செயல்படும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப் புறங்களில் வசிக்கும் ஏழை மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி மற்றும் இலப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரையுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

இப்பயிற்சி வகுப்பில் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கணினி தகவல் தொழில் நுட்ப பிரிவில் டாலி பயிற்சி 3 மாதங்களுக்கு அளிக்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்புக்கொள்ளலாம், என்றும், மேலும் தகவல்களுக்கு 04328-225362, 9444094324 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!