From Telangana, Namakkal reached 2 thousand 600 tonnes Ration rice train
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த 2 ஆயிரத்து 600 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் 110 லாரிகள் மூலம் சிவில் சப்ளை குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு தேவையான 2 ஆயிரத்து 600 டன் எடையுள்ள தமிழ்நாடு சிவில் சப்ளை அரிசி 42 ரயில் வேகன்கள் மூலம் நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தது.
அங்கிருந்து நாமக்கல், ராசிபுரம், பரமத்தி, கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக சிவில் சப்ளை குடோனுக்கு சுமார் 110 லாரிகளில் அரிசிமூட்டைகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் ரயில்வே கூட்ஸ்ஷெட் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.