Gaja storm rain caused water to the Viswakudi Water reservoir near Perambalur: Farmers happy

கடந்த சில நாட்காளாக பெரம்பலூர் மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மழை நேற்றிரவும், இன்றும் பரவலாக பெய்தது. இதனால், மானாவாரி பயிரான மக்காச்சோளம், பருத்தி, கம்பு, ராகி, சோளம், உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் மழையின்றி பயிர்கள் வாடுவதை கண்டு மனம் வெதும்பி இருந்தனர். தந்போது கஜா புயலால் மழை பெய்துள்ளதால் பெரும், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது பச்சைமலைத் தொடரில் பெய்து வரும் மழையால், கோரையாறு மற்றும், கல்லாறுகளில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இதனால், வரத்து வாய்க்கால் வழியாக ஏரிகளுக்கு சென்றடைந்து வருகிறது. மேலும், காய்ந்து கிடந்த விசுவகுடி நீர்த்தேக்கம் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து சென்று கொண்டிருக்கிறது.
தொடர்ந்து காலை முதலே மாலை வரை மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், இதமான வானிலை நிலவி வந்தது. முன்னதாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று காலை விடுமுறை அளிக்கப்பட்டது.










kaalaimalar2@gmail.com |
9003770497