Girls High School in perambalur to Rs. 1 lakh MPs and legislators were present for public share fund

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ரூ.10.66 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகாசி (குன்னம்) மருதைராஜா (பெரம்பலூர் ), சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி. ராமச்சந்திரன் (குன்னம்) முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார்.

தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டமான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:

தமிழக மக்களின் நலனுக்காகவே பல்வேறு நலத்திட்டஙகளை வாரி வழங்கி வருகின்ற மாண்புமிகு அம்மா அவர;களின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு மாணவ-மாணவிகளுக்கு மிகவும் முக்கியமான பலத்திட்டங்களை வழங்கி வருகின்றது. குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, புத்தகப்பை, காலணி என்பனபோன்ற 13 வகையான நலத்திட்டங்களை இந்தியாவில் எந்த மாநிலமும் வழங்காத வகையில் தமிழ்நாடு அரசு வழங்கி வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

மாணவ-மாணவிகள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் வழங்கப்படுகின்ற இந்த மடிக்கணினிகளை அனைவரும் முறையாகப் பயன்படுத்தி சமுதாயத்தில் நல்ல மாணவர;களாக உயர்ந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் மாணவகர்களாக உருவாக வேண்டும் என்ற மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் உயர்ந்த நோக்கத்தை அனைவரும் நிறைவேற்ற வேண்டும், என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

நாங்கள் பள்ளி பயிலும் காலத்தில் எங்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு உங்கள் காலத்தில் கிடைத்திருக்கின்றது. வாய்ப்புகளை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்திக்கொள்பவரே வெற்றியாளராக உருவெடுக்கிறார்.

பெரம்பலூர் மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்காலத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் சாதனை படைக்க வாழ்த்துகிறேன், என பேசினார்.

இந்நிகழச்சியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளியையும் அமைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்ற அடித்தளம் அமைக்கும் வகையில், பொதுமக்கள் வழங்க வேண்டிய பங்குத் தொகையான ரூ.1லட்சம் ரொக்கத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரிடம் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே தங்கள் சார்பாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள், பெரம்பபலூர் அரசுப் பள்ளித் தலைமை தலையாசிரியர் ரெ.சுந்தரராஜு உள்ளிட்ட 43 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மாணவ-மாணவிகள், கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!