Government and private vocational training centers in the state has allocated 50 percent of seats filled through the district counseling

அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீடு 50 சதவீத இடங்கள் மாவட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
counseling
பெரம்பலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் மஞ்சுளாதேவி விடுத்துள்ள தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீடான, 50 சதவீத இடங்கள் மாவட்ட கலந்தாய்வு மூலம் – 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு கல்வித் தகுதிக்குறிய விண்ணப்பங்களுக்கு பெரம்பலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு மூலம் பயிற்சி பெறுவதற்க்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அழைப்பு அட்டை அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் தரவரிசையின்படி தவறாது கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன் அடைய வேண்டும். கணக்கு மற்றும் அறிவியல் சராசரி மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை வழங்கப்பட்டு அதன்படி அழைக்கப்படுகிறார்கள்.

சிறப்பு வகுப்பினர்களுக்கான கலந்தாய்வு 11.07.2016 அன்றுகாலை 10.00 மணிக்கு நடைபெறும். அதனை தொடர்ந்து 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு 12.07.16 அன்று நடைபெறும்.

இதில் 61 சதவீதம் முதல் 91 சதவீதம் வரை மதிப்பெண்கள் மாணவ, மாணவிகளுக்கு காலை 10 மணி அளவிலும், 43.5 சதவீதம் முதல் 60.5 சதவீதம் வரை மதிப்பெண்கள் மாணவ, மாணவிகளுக்கு மதியம் 12 மணி அளவிலும், 25 சதவீதம் முதல் 43 சதவீதம் வரை மதிப்பெண்கள் மாணவ, மாணவிகளுக்கு மதியம் 2 மணி அளவிலும் கலந்தாய்வு நடைபெறும்.

மேலும் 10 -ம் வகுப்பு கல்வி தகுதியுடையோருக்கு 13.07.16 அன்று 77 சதவீதம் முதல் 98 சதவீதம் வரை மதிப்பெண்கள் மாணவ, மாணவிகளுக்கு காலை 10 மணி அளவிலும், 71 சதவீதம் முதல் 76.5 சதவீதம் வரை மதிப்பெண்கள் மாணவ, மாணவிகளுக்கு மதியம் 12 மணி அளவிலும், 66.5 சதவீதம் முதல் 71 சதவீதம் வரை மதிப்பெண்கள் மாணவ, மாணவிகளுக்கு மதியம் 2 மணி அளவிலும் கலந்தாய்வு நடைபெறும்.

மேலும், 63 சதவீதம் முதல் 66.5 சதவீதம் வரை மதிப்பெண்கள் மாணவ, மாணவிகளுக்கு 14.07.16 அன்று காலை 10 மணி அளவிலும், 60 சதவீதம் முதல் 63 சதவீதம் வரை மதிப்பெண்கள் மாணவ, மாணவிகளுக்கு மதியம் 12 மணி அளவிலும், 57 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை மதிப்பெண்கள் மாணவ, மாணவிகளுக்கு மதியம் 2 மணி அளவிலும்,

55 சதவீதம் முதல் 57 சதவீதம் வரை மதிப்பெண்கள் மாணவ, மாணவிகளுக்கு 15.07.16 அன்று காலை 10 மணி அளவிலும், 51.5 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை மதிப்பெண்கள் மாணவ, மாணவிகளுக்கு மதியம் 12 மணி அளவிலும், 48.5 சதவீதம் முதல் 51.5 சதவீதம் வரை மதிப்பெண்கள் மாணவ, மாணவிகளுக்கு மதியம் 2 மணி அளவிலும் கலந்தாய்வு நடைபெறும்.

எனவே மாணவ, மாணவிகள் தங்கள் கலந்தாய்விற்குரிய தேதிகளில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!