Government bus that does not pay compensation to victim victims: Perambalur court orders

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலக உதவியாளருக்கு ரூ.3 லட்சத்து 88ஆயிரம் இழப்பீடு வழங்காததால் மாவட்ட நீதிமன்ற உத்திரவின் பேரில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே உள்ள ரஞ்சன்குடியை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது43). இவர் வேப்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2013 ஆண்டு ஆகஸ்டு மாதம் 19 தேதியன்று ராஜாங்கம் வேப்பூரில் இருந்து பெரம்பலூருக்கு அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெருமத்தூரில் இருந்து வேப்பூருக்கு சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜாங்கம் பலத்த காயம் அடைந்தார். இதில் வலது கால் விரல் ஒன்று துண்டாகியது. சுயநினைவிழந்தும் சிகிச்சை பெற்று வந்த அவர் , அரசு போக்குவரத்துக்கழகத்திடம் இருந்து
இழப்பீடு கேட்டு பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை முடிவில் ராஜாங்கம் ரூ.1லட்சத்து 3ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க நீதிமன்றம் கடந்த 27.11.2015-ல் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்திரவுபடி அரசுப்போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க முன்வரவில்லை.

இதனால், ராஜாங்கம் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். அதனடிப்படையில் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ. 3லட்சத்து 88 ஆயிரத்து 582 ரூபாய் வழங்காததால், திருச்சி கோட்டத்திற்கு சொந்தமான அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பாலராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அமீனா பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்திற்கு சென்று அங்கு சென்னை-அரியலூர் மார்க்கத்தில் இயங்கும் அரசு பஸ்சை ஜப்தி செய்து மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

தொடர்ந்து இதே போன்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால் சுமார் 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் பெரம்பலூர் பணிமனையில் உரிய வழித்தடங்களில் இயக்காமல் நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!