Government schools, branch libraries and books worth Rs 22 lakh was provided MP. M.chandirakasi
பெரம்பலூர் : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரம் நடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி கலந்துகொண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22லட்சம் மதிப்பிலான புத்தகங்களை அரசுப்பள்ளிகளுக்கும், கிளை நுhலகங்களுக்கும் வழங்கினார்.
அதனடிப்படையில் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 89 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும், 40 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், 22 கிளை நூலகங்களுக்கும் நூல்களை வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது:
நாளைய இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்கும் மாணவச் செல்வங்கள் தங்கள் வாழ்க்கையில் கல்வி அறிவினைத் தடையின்றி பெற மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா (ஜெ.ஜெயலலிதா) எண்ணிலடங்காத்திட்டங்களை வழங்கினார். குறிப்பாக கிராமத்துக் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக் கனியாகிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் படிப்புக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், புத்தகப்பை, கல்வி உபகரணங்கள், ஊக்கத்தொகைகள், விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி என அடுக்கடுக்கான திட்டங்களை வாரி வழங்கினார்.
அவர்களின் நினைவாக மாணவச் செல்வங்கள் தங்களின் பொது அறிவினை வளர்த்துக்கொள்ளும் வகையில் தன்னம்பிக்கையூட்டும் செய்திகள் அடங்கிய புத்தகங்கள், பொது அறிவுப் புத்தகங்கள், நன்னெறி சிந்தனைகளை போதிக்கும் புத்தகங்கள் என பலதலைப்புகளினாலான ரூ.22 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை இன்று வழங்கியுள்ளோம். மாணவர;கள் அனைவரும் இந்தப்புத்தகங்களை நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூரில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி பார்வையிட்டார்.
இம்மருத்துவ முகாமில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், கர்ப்பப்பை வாய் பரிசோதனை, சித்த மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, பெண்களுக்கான பொது மருத்துவம் உள்ளிட்ட சேவைகளும், பல்வேறு பிரிவுகளின் கீழ் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டன.