Government should take care of road maintenance: resolution passed at the Perambalur road workers meeting

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் 6வது பெரம்பலூர் மாவட்ட மாநாடு பெரம்பலூர் பழையபேருந்து நிலையம் அருகே உள்ள ரெட்டியார் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட துணைசெயலாளர் ஏ.ராஜா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் பி.முத்து தலைமை வகித்தார். கே.கருணாநிதி அஞசலி தீர்மானம் நிறைவேற்றினார். மாநில செயலாளர் சி.மகேந்திரன் தொடக்க உரையாற்றினார்.

வட்ட தலைவர் ரஜினி, பாலசுப்ரமணியன், ராமச்சந்திரன் உள்ளிட்ட வெரம்பலூர் வேப்பந்தட்டை வட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சி.சுப்ரமணியன் செயலாளர் அறிக்கையும் பொருளாளர் பி.சுப்ரணியன் வரவுசெலவு அறிக்கையும் அளித்தனர்.

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கி.ஆளவந்தார், பி.தயாளன், பி.குமரிஆனந்தன் எம்.சிவக்குமார் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச் செயலாளர் எம்.பாலசுப்ரமணியன் சிறப்புரை ஆற்றினார்.

சாலைப் பராமரிப்பு பணியினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட்டு அரசே ஏற்ற நடத்த வேண்டும், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும், மற்றும் நிரந்தர ஊதிய பட்டியலில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும், பணிநீக்க காலத்தில் இநற்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசுப்பணி வழங்க வேண்டும்,

காலியாக உள்ள பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் மற்றும் மே மாதம் 8ஆம் தேதி ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறவுள்ள சென்னை தலைமை செயலகம் முற்றுகை போராட்டத்தில் சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. நிர்வாகி கே.மணிவேல் நன்றி கூறினார்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!