Government to improve the infrastructure in minority educational institutions on behalf of Rs. 50 lakh funding : Namakkal Collector inform
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் அரசு உதவி பெறும்,அரசு உதவி பெறாத துவக்கப்பள்ளி,நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகிய சிறுபான்மையினர் நல பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டிடம், அறிவியல் ஆய்வுக்கூடம், நூலகம், கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம் மற்றும் சுற்றுச்சுவர்உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொள்ளும் வகையில் ஐடிஎம்ஐ திட்டத்தின் கீழ் பள்ளி ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள அனைத்து சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் சிறுபான்மையின சான்றிதழ், பள்ளி பதிவுச் சான்றிதழ், டிரஸ்ட் பதிவுச் சான்றிதழ்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திட்ட மதிப்பீடு சான்றிதழ்சான்றுகளை பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இத்திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.