govt. bus does not provide compensation : The court confiscation bus

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், நொச்சிக்குளத்தை சேர்ந்த கந்தசாமி மகன் இளையராஜா (வயது 26 / 2013). அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி அசன்வீரன்குடிக்காடு அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து இளையராஜா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இறந்து போன இளைராஜாவின் மனைவி அம்சவள்ளி, அவரது தந்தை கந்தசாமி ஆகியோர் பெரம்பலூர் முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு போக்குவரத்துக்கழகம் ரூ. 14 லட்சத்து 4 வழங்க உத்திரவிட்டிருந்தது. ஆனால், போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்காமல் அலைகழித்து வந்தது.

நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டதால் வழக்கு மீது இன்று விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த பாலராஜமாணிக்கம் திருச்சி அரசு போக்குவரத்து கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ. 17லட்சத்து 33 ஆயிரம் வழங்கவும், சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்திரவிட்டார். அதன் பேரில் நீதிமன்ற ஊழியர்கள் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்ற அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதி மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!