Group -2 Exam Model Exam Training Course on behalf of Employee Employment Office tomorrow
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தோ;வாணையத்தால் குரூப்-2 தேர்வு வரும் நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
தற்போது குரூப்-2 தேர்வுக்கென தனியே நாளை அக்., 1ம் தேதி திங்கள் கிழமை முதல் மாதிரித்தேர்வு பயிற்சி 25 நாட்கள் இலவசமாக நடைபெறுகிறது. இம்மாதிரித்தேர்வுகள் பாடவாரியாகவும் மற்றும் அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கிய மொத்த தேர்வாகவும் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித்தேர்வு எழுதும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.