Hans smuggler arrested with car worth Rs 3 lakh; Perambalur police chase and arrest

பெரம்பலூர் அருகே ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை என்ற இடத்தில், எஸ்.எஸ்.ஐ., ஜெயபால் தலைமையில் காவலர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் தினேஷ்குமார் உள்ளிட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகன சோதனையில் நேற்றிரவு ஈடுபட்டிருந்த போது, நிற்காமல் சென்ற ஒரு காரை சினிமா துரத்திச் சென்று, எசனை மடக்கி சோதனையிட்டதில், அரசால் தடை செய்யப்பட்ட 19 மூட்டை ஹான்ஸ் பாக்கெட்டுகள் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து ஹான்ஸ் மூட்டைகளையும், காரையும் பறிமுதல் செய்த ரோந்து போலீசார் கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலம், ராஜ்பூட் பகுதியை சேர்ந்த தனம்சிங் மகன் சவாய்சிங் (வயது 29), என்ற வாலிபரை கைது செய்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சவாய்சிங்கிடம் பெரம்பலூர் போலீசார் நடத்திய விசாரணையில், சேலத்திலிருந்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சங்கர் என்பவர் நடத்தி வரும் ஒரு கடைக்கு ஹான்ஸ் மூட்டைகளை சப்ளை செய்ய எடுத்து வந்ததாக சவாய்சிங் தெரிவித்துள்ளான். சங்கரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் அவனது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த எண்ணின் முகவரியின் அடிப்படையில் சங்கரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது சாரணை முடிவில் தான் முழுமையான தகவல் தெரிய வரும்.

அது குறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஹான்ஸ் குறித்த செய்த காலைமலரில் செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.kalaimalar.com/increased-sales-of-banned-goods-including-hans-in-perambalur/


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!