Happy wishes to everyone Pongal (Makara Sankranti)

pongal-sankranti

இன்று நாடு முழுவதும் நம் உழவர்கள் பொங்கல், மகரசங்கராந்தி என பல்வேறு பெயர்களில் அறுவடை திருநாளை கொண்டாடும் உலகிற்கு உணவளிக்கும் உழவர்களுக்கும், வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் (மகரசங்கராந்தி) நல்வாழ்த்துகள்!!

பொங்கல், மகரசங்கராந்தியை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் காலைமலர் மலராது…

வழக்கம் போல் காலை வரும் 17ம் தேதி காலை முதல் காலைமலர் மலரும்! மீண்டும் வாழ்த்துகளுடன் தெரிவித்துக்கிறோம்.

தகவலுக்காக :

தை மாதம், மகர சங்கராந்தி, அல்லது சங்கராந்தி சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். இது துவக்கத்தில் குளிர்கால கதிர்த்திருப்பத்துடன் இயைந்திருக்கலாம். தற்போது இது சனவரி 14 அன்று நிகழ்கிறது. இன்றிலிருந்து பகல் நேரம் கூடுதலாவது கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால் அறுவடை திருவிழாவாகவும் சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நோபாளம், மியான்மர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் கூட மகர சங்கராந்தி விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

சூரியனைச் சுற்றி பூமி வந்தாலும் இந்திய வானசாஸ்திரத்தில் பனிரெண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது. சமசுகிருதத்தில் சங்கரமண எனில் நகரத் துவங்கு எனப் பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று.இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு,வானிலை மற்றும் பன்முக பண்பாடு காரணமாக பல்வேறு பெயர்களிலும் பல்வேறு வரலாறுகளுடனும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!