Health awareness meeting for Restaurant, Bakery, tea lounges in Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவகம், பேக்கரி, தேநீர் விடுதி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம், அஸ்வின்ஸ் கூட்ட அரங்கில் மாவட்ட நியமன அலுவலர் மா.சௌமியா சுந்தரி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பதிவு மற்றும் உரிமம் அனைத்து கடைகளுக்கும் கட்டாயம் வாங்கவேண்டும் எனவும், அப்படி உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெறாத கடைகளுக்கு ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் சுமார் 200 உணவு வணிகர்களுக்கு உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழ் பெறுவதற்கான செலுத்துச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களின் உட்புறமும், அதன் சுற்றுபுறத்தை சுற்றிலும் சுகாதாரமான முறையிலும், தண்ணீர் தேங்காத நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும், செய்திதாளில் வைத்து உணவுபொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும், சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து பொட்டலம் செய்யக்கூடாது எனவும், உணவு கழிவுகளை மூடியுடன் கூடிய குப்பை தொட்டியில் சேமித்து அப்புறபடுத்தவேண்டும்;. உணவு பொருட்களை கையாளும் போது, தலையுறை (Hairnet), முகவுறை (Mask) மேல் அங்கி (Apron) போன்றவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீh; கொடுக்கப்படவேண்டும். உணவுப்பொருட்களில் அளவுக்கு அதிக செயற்கை நிறமூட்டிகள் சேர்த்தல் கூடாது. அனைத்து உணவுக்கடைகளிலும் உணவுப்பொருட்களின் விலைப்பட்டியல் ஒட்டப்படவேண்டும்.

உணவுப்பொருட்களை பாத்திரங்களில் வாங்குபவர்களுக்கு 5 சதவீதம் விலைகுறைப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகை வைத்து குறைத்து வழங்கப்படவேண்டும். தேநீர் விடுதிகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தகூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தகூடாது. கடை உரிமையாளர்களுக்கு டெங்குகாய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

உணவு பொருட்களில் கலப்படம் தொடர்பான புகார் அளிப்பதற்கு வாட்ஸ்அப் எண். 9444042322 என்ற எண்ணில் நுகர்வோர்கள் புகார் கொடுக்கலாம் என்றும், கொடுக்கப்பட்ட புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்றும், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலக தொலைபேசி எண்: 04328-224033 தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ந.சின்னமுத்து, பெரம்பலூர் நகராட்சி, த.அழகுவேல், வேப்பூர் வட்டாரம், வெ.ரத்தினம், வேப்பந்தட்டை வட்டாரம், ந.ரவி, ஆலத்தூர் வட்டாரம், மா.இலட்சுமணபெருமாள், பெரம்பலூர் வட்டாரம், மற்றும் அனைத்து கடை உரிமையாளர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!