Heavy rain in Perambalur district: Sowing work in villages on perambalur districts

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் ,
பெரம்பலூர் 20 மி.மீ, செட்டிக்குளம் 64 மி.மீ, வேப்பந்தட்டை 39 மி.மீ பாடாலூர் 27 மி.மீ, தழுதாழை 26 மி.மீ என மொத்தம் 176 மி.மீ பதிவாகியது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 35.20 மி.மீ- ஆகும்.

கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையால், உழவு செய்து பண்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலத்தில் இன்று பெரும்பாலான விவசாயிகள் ஆடிப்பட்டம் விதைப்பு செய்தனர். மானாவாரி பயிர்களான பருத்தி, கம்பு, மக்காச்சோளம், நிலக்கடலை, பயிறு வகைகளான அவரை, துவரை, மொச்சை மற்றும் பூசணி, பரங்கி, சுரக்காய் போன்ற பயிர்கள் சாகுபடிக்கான விதைப்பு பணி கிராமங்களில் இன்று காலை முதலே தீவிரமாக நடந்து வருகிறது.

வறட்சியால் வாடிய விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கால்நடைக்களுக்கான பசுந்தீவனமும் அதிகரித்து உள்ளதால் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!