Heavy rain will continue for the next 24 hours in the state: Meteorological Information
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் குமரி அருகே மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சை, மயிலாடுதுறையில் தலா 11 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. ஆந்திரா அருகே வங்கக்கடலில் நீடித்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்து மேலடுக்கு சுழற்சியாக மாறியுள்ளது.