Held on Tomorrow, Namakkal East District DMK Executive Meeting
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை :
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.
மாவட்டஅவைத்தலைவர் உடையவர் நிகழ்ச்சிக்கு தலமை வகிக்கிறார். மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் தான் முன்னிலை வகிக்கிப்பதாகவும், நாமக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்துப் பேசுகின்றனர்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட கட்சி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.