Hindu Religious and Charitable Workers protest against H Raja, struggle in Namakkal!
தரைகுறைவாக பேசிய பா.ஜ., தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ., சார்பில் வேடசந்துாரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்யின் தேசிய செயலாளர் ராஜா, இந்து சமய அறநிலைத்துறையில் பணிபுரியும் அலுவலர்களையும், அலுவலர் வீட்டு பெண்களையும் தரம் தாழ்த்தி ஆபாசமாக பேசியதை கண்டித்து, தமிழ்நாடு அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் முன், மதியம் 1:00 மணி முதல் அலுவலக வெளிநடப்பு போராட்டம் செய்தனர்.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். அதில் பா.ஜ., தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது. போராட்டத்தில் பொருளாளர் சிவக்குமார், செயலாளர் புலவர் பெரியசாமி, இந்து அறநிலைத்துறை பணியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
முடிவில், ஆபாசமாக பேசிய பா.ஜ., தேசிய செயலாளர் ராஜாமீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நாமக்கல் போலீஸ் எஸ்.பி., அலுவலக அதிகரியிடம் மனு கொடுத்தனர்.