Holidays for liquor shops in front of Gandhiji Jayanti: Order of Namakkal Collector
நாமக்கல்: காந்தில ஜெயந்தியை முன்னிட்டு வருகிற அக்.2ம் தேதி அனைத்து மதுபானக்கடைகளையும், பார்களையும் மூடவேண்டும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
வருகிற அக்.2ம் தேதி செவ்வாய்க்கிழமை காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பெற்ற பார்கள் உள்ளிட்டவைகளை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே அன்று அனைத்து மதுபானக்கடைகள், பார்கள் அனைத்தையும் மூடிவைக்க வேண்டும். மீறி திறந்தாலோ, மறைமுகமமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.