How to understand the quality of drinking water sold in locked? : Perambalur Collector’s explanation

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் பாட்டில் குடிநீரின் தரத்தை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தை பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்து கொள்ள உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, https:/safetwaterfssai.gov.in/cleanwater/home என்ற இணையதளத்தில் உள்ள தரவினை பயன்படுத்தி குடிநீர் பாட்டில், பாக்கெட் கேனில் உள்ள ஐ.எஸ்.ஐ எண் அல்லது உணவுப் பாதுகாப்பு உரிமம் FSSAI எண்ணை பயன்படுத்தி அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் 6 மாதம் மற்றும் ஒரு வருட பரிசோதனை அறிக்கை, ஐ.எஸ்.ஐ தரம் உணவு பாதுகாப்புதுறையின் FSSAI எண், காலம் (வேலிடிட்டி) போன்றவற்றை பொதுமக்கள் தெரிந்து கொண்டு குடிநீரின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.

மேலும் பொதுமக்கள் வாங்கும் ஒவ்வொரு குடிநீர் பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் 20 லிட்டர் கேன்களிலும், அதன் தயாரிப்பு நிறுவனத்தின் ஐ.எஸ்.ஐ எண் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை குளுளுயுஐ எண், இரண்டும் பதிவிடப்பட்டு இருக்கும். அதில் ஏதேனும் ஒரு எண்ணை இந்த இணையதளத்தை பயன்படுத்தி அதில் குடிநீர் நிறுவனத்தின் பெயரை பதிவேற்றம் செய்தால், அந்த நிறுவனத்தின் ஐ.எஸ்.ஐ தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உரிமம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதையும், அந்த நிறுவனத்தின் தண்ணீர் ஆய்வக அறிக்கையையும் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

இது குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தாலோ, உணவு தொடர்பான புகார்கள் இருந்தாலோ 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம். 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் அதன் தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி அச்சிடப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாக்கெட்டுகள் அல்லது 20 லிட்டர் கேன்களில் ஐ.எஸ்.ஐ மற்றும் FSSAI எண் இல்லை என்றால் அது போலியானது. அது தொடர்பாக உடனே புகார்களை தெரியபடுத்தலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய நியமன அலுவலர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு, 2வது தளம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!