If Congress comes to power… the people will be given an insurance scheme: the state president’s speech in the campaign for wealth!
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 18 வது லோக்சபா தேர்தல் , இந்த தேர்தலில் ஜனநாயகம் வேண்டுமா, சர்வதிகாரம் வேண்டுமா என கேள்வி எழுந்துள்ளது. பாஜ தேர்தல் வாக்குறுதியில் ஒவ்வொரு வாக்காளருக்கு ரூ .15 லட்சம் தரப்படும் என்றனர்.
ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் வெளிநாடுகளில் சுவீட்ஸ் வங்கியில் கள்ளப்பணம், கருப்பு பணம் என லட்சக்கணக்கான கோடி பணம் பதுங்கியுள்ளனர். அதனை மீட்டு தருவேன் என நரேந்திர மோடி தெரிவித்தார். அதற்கு 6மாதம் காலக்கெடு கேட்டார். ஆனால் பணத்தை மீட்கவும் இல்லை, தரவும் இல்லை.
2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் வேலைவாய்ப்பு தரவில்லை. இதனால் சிறு, குறு தொழில்கள் நசுங்கி விட்டது.
காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 60 ரூபாயும், டீசல் 50ரூபாயும் விற்றது. ஆனால் பாஜ ஆட்சி அமைந்தால் பாதியாக குறைப்பேன் என்றார். ஆனால் இப்போது பெட்ரோல் ரூ .100, டீசல் ரூ.90க்கு விற்கப்படுகிறது. இரண்டு மடங்கு விலை ஏற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு சிலிண்டர் ரூ.420 ஆனால் பாஜ ஆட்சியில் ஒரு சிலிண்டர் ரூ ஆயிரத்திற்கு வழங்கப்படுகிறது.
இந்தியா பொருளாதாரத்தை ஒவ்வொரு இந்தியனுக்கு ரூ 1.50 லட்சம் கடன் சுமையை வாங்கி வைத்துள்ளார் நரேந்திரமோடி. அவரது நண்பர்களான அதானி, அம்பானி ஆட்சியா என தெரியவில்லை. பாஜ ஆட்சியில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆயுஷ்மான்பாரத் திட்டத்தில் 7.50 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது என ஒரு அறிக்கை வந்துள்ளது. கண்ட்ரோலர் ஆப் ஆடிட் ஜென்ட்ரல் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளில் சாலை போடுவதில், ஆயுஷ்மான்பாரத் நிகழ்ச்சி ஆகியவற்றில் ஊழல் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது. 100 நாள் வேலைதிட்டத்தை கொண்டுவந்தது காங்கிரஸ் ஆட்சி. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டத்தில் 150 நாள் வேலை வழங்கப்படும். இத்திட்டத்தில் பொருளாதாரத்தில் மக்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றனர். தகவல் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. கட்டாய கல்வி திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் . ஆனால் பாஜ ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சதவீத வாக்குறுதிகளை இன்னும் 2ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார். தமிழகத்தில் கொடுக்காத வாக்குறுதிகளான எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், காலை உணவு திட்டம், நான் முதல்வர், புதுப்பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததால் மகா லெட்சுமி திட்டத்தில் தாய்மாருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கொடுப்போம். டிப்ளமோ படித்து வேலைவாய்ப்பில்லாதவருக்கு ஆண்டுக்கு உதவி தொகை ரூ ஒரு. லட்சம் வழங்கப்படும் . விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு வறட்சி, வெள்ளம் வந்தால் 10 நாட்களுக்குள் தீர்வு, காப்பீட்டு திட்டம், விவசாய விளை பொருட்களுக்கு எம்எஸ் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி விலை நிர்ணயம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தற்போது தினமும் ரூ. 176 கூலி வழங்கப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தினக்கூலி ரூ . 400 வழங்கப்படும். மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு, ஆயுள் காப்பீட்டு திட்டம் வழங்கப்படும் என தெரிவித்தார். சர்வதிகாரம் வீழவேண்டும், ஜனநாயகம் வெல்லவேண்டும். அதற்காக இந்தியா கூட்டணிக்கு ஓட்டுபோடவேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுசெயலாளர் தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் தகவல் தொடர்பு இணை தலைவர் ஜான்அசோக் வரதராஜன், மாவட்ட தலைவர் சுரேஷ், முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார், முன்னாள் நகர தலைவர் மதன், சிறுவாச்சூர் திமுக கிளை நிர்வாகிகள் ரெங்கநாதன், அழகேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.