If you do not provide job security for Co-op elections boycott in demonstration in Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த, கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பா. சிவக்குமார் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் கணேசன், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார் பேசியதாவது:

கூட்டுறவு சங்கத் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆளும் கட்சி தரப்பில் பல்வேறு அச்சுறுத்தல்கள் வருகிறது. இதனால், கூட்டுறவு சங்க பணியாளர்கள் தங்களது பணிகளில் முழுமமையாக ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கூட்டுறவு சங்கத் தேர்தல் முறையாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டுமானால், கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கு காவல்துறையினர் மூலமாக உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தொடர்ந்து, கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தவும், காவல் துறையினரின் பாதுகாப்பு வழங்க வேண்டும் இல்லாவிட்டால் கூட்டுறவு சங்க தோ;தலை புறக்கணிக்க முடிவெடுத்தள்ளதாக அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் முழக்கமிடப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்துப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் சுப்ரமணியன், மருதமுத்து, அரப்பளி, ஆர். சிவக்குமார், விஸ்வநாதன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!