In a day camp for people with disabilities in solving special GDP in perambalur collectorate

பெரம்பலூரில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்று சேரும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம்களை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இம்முகாமில் ஓய்வூதியம், உபகரணங்கள், அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கான மாற்றுத்திறனாளிகள் 23 பேர் மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, மனுக்களை ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு உடனுக்குடன் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்த நபர்களில் 3 நபர்களுக்கு உடனடியாக மாவட்ட ஆட்சியர் அடையாள அட்டைகளை வழங்கினார்

இன்றைய முகாமில் தேசிய அடையாள அட்டை வேண்டி 8 நபர்களும், வங்கிக்கடன் வேண்டி 5 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 3 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் வேண்டி மனுக்களும் பெறப்பட்டது. மேலும், இன்றைய முகாமில் மனுகொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளை மனநல மருத்துவர; கிருஷ்ணமூர்த்தி, எலும்பு முறிவு மருத்துவர் தணிகாசலம், காது-மூக்கு-தொண்டை மருத்துவர் தேவேந்திரன் உள்ளிட்ட மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!