In a school near Perambalur, a teenager who took a video of female students urinating on his cell phone was slapped with dharma!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நன்னை கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. அங்கு, 6 முதல் 10-ம் வகுப்புகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் படிக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. உயர்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று மாணவிகள் சிறுநீர் கழித்து வருவது வழக்கம்.
இன்றும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகள் சிலர் சிறுநீர் கழிக்க சென்ற போது அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அத்து மீறி மறைந்திருந்து தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட மாணவிகள் கூச்சலிட்டு உள்ளனர். மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். மாணவிகளிடம் விவரத்தை கேட்டு அறிந்து, வாலிபர் தேடி கண்டுபிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
அடி தாங்க முடியாத வாலிபர் தப்பி தலைமறைவானர். பின்னர், போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சென்ற குன்னம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் வந்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (23), என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த குன்னம் போலீசார் தலைமறைவான மணிகண்டனை தேடி தீவிர வருகின்றனர்.
அரசு பள்ளி வளாகத்திற்குள் மாணவிகள் சிறுநீர் கழிப்பதை வாலிபர் ஒருவர் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பல கோடி ரூபாய்களை வீணாக்கும் மத்திய மாநில அரசுகள், அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஏற்படும் அவலங்களை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.