In Namakkal, a free consultation medical camp on behalf of Erode Gem Hospital
நாமக்கல்லில் ஈரோடு ஜெம் ஆஸ்பத்திரி சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஈரோடு ஜெம் ஆஸ்பத்திரி சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. டாக்டர் நவநீத ராகவன் தலைமையில் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் வயிற்றில் உள்ள உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், பெருங்குடல், கணையம், மலக்குடல் புற்றுநோய்கள், குடல் இறக்கம், பித்தப்பை கற்கல், உடல் பருமனை குறைத்தல், ஓவரிக்கட்டிகள், கர்ப்பப்பை கோளாறுகள், குடல் புண், கணைய அலர்ஜி உள்ளிட்ட நோய்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் கலந்துகொண்டு பரிந்துரைக்கப் பட்டவர்களுக்கு எண்டாஸ்கோபி மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஈரோடு ஜெம் ஆஸ்பத்திரியில் இலவமாக வழங்கப்பட்டது.
மேலும் இம்முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இலவசமாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஈரோடு ஜெம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இந்த முகாமில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இலவச ஆலோசனை பெற்றனர்.