In Namakkal district, the scheme of providing free dairy cows in 4 villages; Call to apply

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தமிழக முதல்வரின் இலவச கறவைப்பசுக்கள் வழங்கும் திட்டம் 2018-19 ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2018 மற்றும் ஜனவரி 2019ம் மாதங்களுக்கு 4 கிராமங்களில் இலவச கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் டிசம்பர் 2018ம் மாதத்தில் எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம், கீழப்பாளையம் மற்றும் ஜனவரி 2019ம் மாதத்தில் எலச்சிபாளையம் ஒன்றியம் மோளிப்பள்ளி, போக்கம்பாளையம் ஆகிய கிராமங்களில் 200 பயனாளிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்படும்.

முதல் கிராம சபா வரும் 16ம் தேதி அன்றும் இரண்டாம் கிராம சபா வரும் 23ம் தேதியிலும் நடத்தப்பட்டு பயனாளிகள் தேர்வு இறுதி செய்யப்படும். கிராம ஊராட்சிகளில் கிராம சபா மூலம் தேர்வு செய்யப் படும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச கறவைப் பசுக்கள் கிடைக்கும் வகையில் இலக்கு நிர்ணயித்து திட்டம் சாதனையிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயனடைய பயனாளிகளின் தகுதிகள் : பயனாளிகள் அனைவரும் பெண் பயனாளியாக இருக்கவேண்டும். ஏழ்மையிலும் ஏழ்மையான பெண்கள், நிலமில்லா விவசாய தொழிலாளி, சம்மந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

தற்சமயம் பசுக்கள் இல்லதவராக இருக்க வேண்டும். மத்திய,மாநில அரசு ஊழியராகவும், நிறுவனம், கூட்டுறவுத்துறை ஊழியராகவும், கிராம பஞ்சாயத்து, உள்ளாட்சி உறுப்பினராகவும் (உறுப்பினர் மனைவி, அம்மா, அப்பா, மாமனார், மாமியார், மருமகன், மருமகள், அவரின் மகன், மகள்) இருக்க கூடாது. ஏற்கனவே இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவராக இருக்க கூடாது.

பெண்களின் சிறப்பு பிரிவினரான விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர்களுக்கு முன் உரிமை அளிக்கப்படும். ஆகவே மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு கிராமசபைக்கூட்டங்களில் திட்டத்தில் பயனடைய விரும்புவோர் கலந்துக்கொண்டு விண்ணப்பத்தினை அளித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!