In Perambalur 19 people injured at the jallikattu

பெரம்பலூர் அருகே உள்ள கள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட காளை மாடு ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது. தீயணைப்பு படையினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டனர்.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கள்ளப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் இருந்து சுமார் 255க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்ட்ட காளைகள் கலந்து கொண்டன , 250க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

அரசு அனுமதியுடன் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டிற்கு, உள்ளூர், வெளியூரில் இருந்த வருகை புரிந்த மாடு பிடி வீரர்கள் மற்றும உறவினர்களுக்கு வடை, பாயசம் மற்றும் கறி விருந்தும் அளித்தனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே விளையாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்ட்டனர்.

மாரியம்மன் கோவில் திடலில் வாடி வாசல் அமைக்கப்பட்டு காலை 9மணி முதலே காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டது. அங்கு திரளாக திரண்டு இருந்த மாடுபிடிவீரர்கள் காளைகளை அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு கையில் சிக்காமலேயே மிரட்டி சென்றது. ஒரு சில காளைகள் சீறி பாய்ந்ததால் மாடுபிடி வீரர்கள் சிலர் மிகச் சிறிய அளவில் காயமடைந்தனர்.

முதலுதவி செய்யப்பட்டு அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டது. காளைகள் அடக்கியவர்களுக்கு பரிசுப் பொருட்கள், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்ட்டது. இந்த ஜல்லிக்கட்டை காண இன்று ஞாயிற்று கிழமை விடுமறை ஆயிரக்கணக்கானோர் விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு கண்டு களித்தனர்.

ஜல்லக்கட்டு நடந்ததால் கள்ளப்பட்டி கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. காவல் துறை, வருவாய்துறை, கால்நடைத்துறையினர் தொடர்ந்து அயராமல் பாதுகாப்பு பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!