In Perambalur 2,050 students who participated in the environmental awareness program: Guinness record attempt
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பெரம்பலூர் ரோட்டரி சங்கம், பெரம்பலூர் வள்ளலார் மோட்டார்ஸ் ஆகியவை இணைந்து பெரம்பலூர் ரோவர் பள்ளி மைதானத்தில் , பை-சைக்கிள் என்ற வடிவத்தில் நின்று கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சைக்கிள் ஓட்டுவதால் உடல் தகுதி பெறும் என்பதை இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னதாக 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சைக்கிள் பேரணி நடத்தினர். ரோவர் பள்ளியில் துவங்கிய பேரணி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் சென்று, மீண்டும் ரோவர் பள்ளியை வந்தடைந்தது.
பின்னர், கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 50 மீட்டர் நீளம், 37 மீட்டர் அகலம் கொண்ட சைக்கிள் வடிவில் 2,050 பேர் 5நிமிடம் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியை இந்தியன் புக் ரெக்கார்டு அமைப்பின் அதிகாரியான முருகானந்தம் நேரில் பார்வையிட்டு இச்சாதனையை அங்கீகரித்து விருது வழங்கினார். மேலும், கின்னஸ் சாதனைக்கு , இந்தியன் புக் ரெக்கார்டு சார்பில் இந்த மாணவர்களின் விழிப்ர்ணர்வு நிகழ்ச்சி பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது. சாதனைத் திட்டத்திற்கான திட்டத் தலைவர் வள்ளலார் ஜெ.அரவிந்தன்,
திட்ட செயலாளர் கார்த்திக், ரோட்டரி சங்கத்தின் பெரம்பலூர் தலைவர் அம்பி (எ) கிருஷ்ணன், செயலாளர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ரோட் டரி கிளப் கவர்னர் முருகானந் தம், ரோட்டரி சிறப்புத் திட்ட இயக்குநர் ஆனந்தஜோதி, ரோவர் கல்வி நிறுவனங்களின் துணை சேர்மனும், ரோட்டரி சங்க துணை கவர்னருமான ஜான்அசோக் வரதராஜன், அச்சங்கத்தின் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மாருதி ரமேஷ், மற்றும் சங்க முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.