In Perambalur, a young girl who dares to put up with her husband, who refuses to come to her family!

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளைம் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் மனைவி விஜயசாந்தி என்பவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு:

விஜயசாந்தியும், பக்கத்து கிராமமான அடைக்கம்பட்டியை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் லோகநாதன். இவர் தற்போது உளுந்தூர்பேட்டையில் உள்ள பட்டாலினில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மாபாளைத்தை சேர்ந்த விஜயசாந்தி பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது லோகநாதனும் பெரம்பலூரில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது இருவரும் ஒரே பேருந்தில் சென்று வந்ததில் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் லோகநாதன் வீட்டில் உள்ளவர்கள் காதலர்களை இருவரையும் சேர்த்து கொள்ள மறுப்பதால் தன்னை கைவிட்டு விட்டு சென்று விட்டார் என்றும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டால் தொடர்பை துண்டித்து வருகிறார் என்றும், அதனால், காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் காவல் நிலையத்தில், புகார் அளிக்க சென்றால் தன்னை அலைக்கழிப்பதாக கூறி நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டும் மழையிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!