#In Perambalur Ariyalur district CPM plenary meeting.
பெரம்பலூர். டிச 25- பெரம்பலூர், அரியலூர் மாவட்ட அளவில் கொல்கத்தா பீளீன முடிவுகள் மற்றும் திருநெல்வேலி மாநில மாநாடு விளக்க சிறப்பு பேரவை கூட்டம் பெரம்பலூர – துறைமங்கலத்தில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டக்குழு முடிவுகள் குறித்து சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை விளக்கவுரை ஆற்றினார். கட்சி ஸ்தாபனம் குறித்தும் 500 மற்றும் ஆயிரம் நோட்டுகள் செல்லாக்காசு என அறிவித்து மக்கள் படும் வேதனைகள் குறித்தும் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல் படுத்த வலியுறுத்தியும் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் சிறப்புரை ஆற்றினார்.
வாக்கு வெகுஜன அமைப்புகள் குறித்தும் வருகிற 29.12.2016 அன்று பெரம்பலூரில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நடைபெற உள்ள காத்திருப்பு போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அழகர்சாமி விளக்கவுரை ஆற்றினார். கூட்டத்தில் பெரம்பலூர் ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம், அரியலூர் திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.