in Perambalur arrested for taking money from the bank as a fraud

பெரம்பலூரில் விவசாயி போன்றே கையெழுத்திட்டு மோசடியாக வங்கியில் பணம் எடுத்தவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் துறைமங்கலத்தில் இயங்கி வரும், கனரா வங்கி கிளையில் பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்யையா (வயது 60). அவர் கடந்த ஜன.23ம் தேதி வங்கிக்கு எடுக்க வந்துள்ளார். எழுத படிக்கத் தெரியாத கருப்பையா அங்கிருந்த நபரிடம் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி கொடுக்க கோரியுள்ளார். படிவத்தை எழுதி கொடுத்த ஆசாமி கருப்பையாவின் வங்கித் தகவல் வைத்துக் கொண்ட அவர் அன்று மாலையே கருப்பையா போலவே பணம் எடுக்கும் படிவத்தில் கையெழுத்திட்டு 10 ஆயிரம் எடுத்துள்ளார். அடுத்த நாள் மீண்டும் கருப்பையா வங்கிக்கு சென்று பணம் எடுக்க சென்ற போது அங்கு ஊழியர்கள், கருப்பையா இந்த வாரத்திற்கு எடுக்க வேண்டிய தொகை 24 ஆயிரம் ரூபாய் எடுத்தாகி விட்டது. அடுத்த வாரம் வர தெரிவித்த போது அதிர்ச்சி அடைந்த கருப்பையா அதிர்ச்சி அடைந்தார். வங்கி ஊழியர்களிடம் வாக்கு செய்த போது போலீசாரிடம் புகார் தெரிவித்து தகராறு செய்வதாக கூறிவிடுவதாக தெரிவித்த போது வீடு திரும்பிய கருப்பையா தனது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இன்று காலை திரண்டு வந்த மங்கலமேடு கிராம பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது வங்கிக்கு வந்த நபரை அடையாளம் கண்ட கருப்பையா உறவினர்களிடம் தெரிவித்தார். அப்போது வங்கிக்குள் உலவிய நபரை பொதுமக்கள் பிடித்த போது, அந்த நபர் கருப்பையா வங்கி கண்க்கில் இருந்து போலியாக கையெழுத்திட்டு 6 ஆயிரம் இரு முறையும், 12 ஆயிரம் ஒரு முறையும் என 24 ஆயிரம் ரூபாய் எடுத்ததை பணம் எடுத்தை நபரை ஒப்பக் கொண்டார். வங்கி சி.சி.டி.வி ஆவணத்துடன் பொதுமக்கள் வங்கி ஊழியர்கள் முன்னிலையில் பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரனையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த குமார் என்பதும், கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. மேலும், இது போன்று வேறு எங்கெங்கு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!