In Perambalur athletics and team sports competition for persons with disabilities was held at the district level.

d-abled-sportzபெரம்பலூர் : மாற்றுத் திறனுடைய மாணவ – மாணவியர்களுக்கு இன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்ட தடகளம், மற்றும் குழுப் போட்டிகளான இறகுப்பந்து, (Table Tennis), Adopted Volleyball, Throw ball மற்றும் கபாடி ஆகிய விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள்; 300 நபர்கள், மாணவிகள் 200 நபர்கள் என மொத்தம் 500 நபர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் கை, கால் ஊனமுற்ற மாணவர்களுக்கான தடகளப் போட்டியில் 50 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் கொளக்காநத்தம் அரசு உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராகவேந்திரன், முதலிடத்தையும், 100 மீ ஓட்டப்பந்தயப் போட்டியில், தந்தை ஹேன்ஸ் ரோவர் பள்ளியைச் சேர்ந்த ரஞ்சித் முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் புது வாழ்வு திட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் முதலிடத்தையும், 100 மீ சக்கர நாற்காலி போட்டியில் அன்பகம் பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற மாணவர் முதலிடத்தையும் பெற்றனர்.

கை, கால் ஊனமுற்ற மாணவிகளுக்கான தடகளப்போட்டியில் 50 மீ ஓட்டப்பந்தயப் போட்டியில் குரும்பலூர் பஞ்சாயத்து யூனியன் பள்ளியைச் சேர்ந்த சு. தீபா முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் பஞ்சாயத்து யூனியன் பள்ளியைச் சேர்ந்த அமரஜோதி என்ற மாணவி முதலிடத்தையும் பெற்றனர்.

பார்வைகுறைபாடு உடைய மாணவர்களுக்கான தடகளப் போட்டியில் 50 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் பெரம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த வாசு என்ற மாணவரும்,

தந்தை ஹேன்ஸ் ரோவர் பள்ளியைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவர் முதலிடத்தையும் பெற்றனர். 100 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் சு. கார்த்திகேயன் என்ற மாணவர் முதலிடத்தை பெற்றனர்.

நீளம் தாண்டுதல் போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மதியழகன் என்ற மாணவர் முதலிடத்தையும்,

பார்வை குறைபாடுடைய மாணவிகளுக்கான தடகளப்போட்டியில் 100 மீ ஓட்டப்பந்தயப் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்.தனலெட்சுமி முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் அன்னை ஈவா மேரி பள்ளியைச் சேர்ந்த ஜனனி முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் அன்னை ஈவா மேரி பள்ளியைச் சேர்ந்த அனுஸ்மா என்ற மாணவி முதலிடத்தையும் பெற்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான தடகளப்போட்டியில் 50 மீ ஓட்டப்பந்தயப் போட்டியில் அன்பகம் பள்ளியைச் சேர்ந்த யு.ஜெகநாதன், மு.நாகராஜ்; என்ற மாணவர்கள் முதலிடத்தையும், நீளம் தாண்டுதல்; போட்டியில் அன்பகம் பள்ளியைச் சேர்ந்த விஜய் மாணவர் முதலிடத்தையும் பெற்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கான தடகளப் போட்டியில் 50 மீ ஓட்டப்பந்தயப் போட்டியில் வளர்பிறை பள்ளியைச் சேர்ந்த யு.பீபீஜான் என்ற மாணவி முதலிடத்தையும் Soft Ball போட்டியில் அன்பகம் பள்ளியைச் சேர்ந்த தினேஷ் முதலிடத்தையும், பெற்றனர்.

காது கேளாத மாணவர்களுக்கான தடகளப் போட்டியில் 100 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் கவுதமபுத்தர் பள்ளியைச் சேர்ந்த P.பிரதீப் முதலிடத்தையும், 200 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் பெரம்பலூர் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அரவிந்த் என்ற மாணவர் முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் கவுதமபுத்தர் பள்ளியைச் சேர்ந்த வரதராஜ் என்ற மாணவர் முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் பெரம்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த அரவிந்த் என்ற மாணவர் முதலிடத்தையும், 400 மீ ஓட்டப்பந்தயப் போட்டியில் கவுதமபுத்தர் பள்ளியைச் சேர்ந்த மு. வரதராஜன் என்ற மாணவர் முதலிடத்தையும், பெற்றனர்.

மாணவிகள்; காது கேளாதோர்களுக்கான பிரிவில் தடகளப் போட்டியில் 100 மீ ஓட்டப்பந்தயப் போட்டியில்; அன்னை ஈவா மேரி கோக் பள்ளியைச் சேர்ந்த ஆ.புஷ்பா முதலிடத்தையும், 200 மீ ஓட்டப்பந்தயப் போட்டியில்; கவுதமபுத்தர் பள்ளியைச் சேர்ந்த கவிதா என்ற மாணவி முதலிடத்தையும்; நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் கௌதமபுத்தா; பள்ளியைச் சேர்ந்த வேம்பு என்ற மாணவி முதலிடத்தையும், 400 மீ ஓட்டப்பந்தயப் போட்டியில் கவுதம புத்தர் பள்ளியைச் சேர்ந்த சுபா என்ற மாணவி முதலிடத்தையும், பெற்றனர்.

மாணவர்களுக்கான குழுப் போட்டிகளில் இறகுப்பந்து போட்டியில் கிருபாகரன் என்ற மாணவர் முதலிடத்தை பெற்றார். மாணவர்களுக்கான குழுப்போட்டிகளில் கையுந்துபந்து போட்டியில்; தந்தை ரோவர் பள்ளியைச் சேர்ந்த மாணவர் அணியினர் முதலிடத்தை பெற்றனர்.

குழுப்போட்டிகளில் மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில்; அன்பகம் பள்ளியைச் சேர்ந்த மாணவர் அணியினர் முதலிடத்தை பெற்றனர். ஆண்களுக்கான குழுப் போட்டிகளில் கபாடி போட்டியில்; கவுதமபுத்தர் பள்ளியைச் சேர்ந்த மாணவர் அணியினர் முதலிடத்தை பெற்றனர்.

பெண்களுக்கான கபாடி போட்டியில் கவுதமபுத்தர் பள்ளியைச் சேர்ந்த மாணவி அணியினர் முதலிடத்தை பெற்றனர். மேலும், இன்று நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற மாற்றுத்திறனுடைய வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் ரோட்டரி லயன்ஸ் கிளப் மூலமாக மதிய உணவு வழங்கப்பட்டது.

வெற்றிப்பெற்ற வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இராம சுப்பிரமணியராஜா பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழச்சியில் தடகளப்பயிற்றுநர்கள் உடற் கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!